தமிழின் தொன்மை: முன்னுரை

Tamil Culture

வணக்கம்!

செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். ஒரு மொழியின் வரலாறு அதை பேசுகின்ற இனம் சார்ந்த பினைப்பு ஆதலால் தமிழ் இனம் மொழியில் மட்டுமின்றி இலக்கியம், தொழில், அறிவியல், மருத்துவம் ஆகிய அனைத்திழும் மிக தொன்மை சார்ந்தவை என்ற கருத்து ஆதி முதல் ஆய்வறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூல்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பி ளாம் எங்கள் தாய்

– மகாகவி பாரதியார்

குறிப்பாக தமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபட பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்ததாகவும், மதுரையில் இருந்த முன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்துச் செயல்பட்டதாகவும் இறையனார் களவியல் உரை கருத்துரைக்கின்றது. இந்நூலின் கருத்தின்படி முச்சங்கங்கங்களின் மொத்த செயல்பாட்டுக் காலம் 9950 ஆண்டுகள் என்பது தெரியவருகிறது. ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் சங்ககாலமாகக் கொள்ளப்படவேண்டிய நிலை இதன்வழி ஏற்படுகிறது. அறிஞர்கள் கருதுகிற கடைச்சங்க காலமான கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாக பத்து நூறாண்டுகள் சங்கங்கள் இருந்துள்ளன என்ற முடிவிற்கு இதன் வழியாக வரஇயலும். எனவே சங்க இலக்கியத்தின் காலம் என்பது சுமார் கி. மு. ஏழாம் நூற்றாண்டளவில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளலாம். இந்த எல்லை கற்பனை கலந்தது என்று கருதுவாரும் உண்டு. இருப்பினும் இந்நூற்றாண்டளவையே நிலை நிறுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன என்று அறியும்போது இக்கருத்தின் உண்மை வலுப்பெறுகிறது.

அப்படிப்பட்ட மொழியின், இனத்தின் தொன்மையை இலக்கியம், தொழில், அறிவியல், மருத்துவம் போன்ற பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் தமிழின், தமிழனின் தொன்மையை விரிவாக காண்போம்…

Load More Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Check Also

துரியோதனன் சொல்லும் சாதிகள் இல்லையடி பாப்பா!

சமீப காலமாக சாதிகளின் பேர் மிக கொடிய சம்பவங்கள் நாம் வாழும் இந்த சமூகத்தில் நடந்தேறி வருகி…