
தமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபட பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்ததாகவும், மதுரையில் இருந்த முன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்துச் செயல்பட்டதாகவும் இறையனார் களவியல் உரை கருத்துரைக்கின்றது. இந்நூலின் கருத்தின்படி முச்சங்கங்கங்களின் மொத்த செயல்பாட்டுக் காலம் 9950 ஆண்டுகள் என்பது தெரியவருகிறது. ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் சங்ககாலமாகக் கொள்ளப்படவேண்டிய நிலை இதன்வழி ஏற்படுகிறது. அறிஞர்கள் கருதுகிற கடைச்சங்க காலமான கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாக பத்து நூறாண்டுகள் சங்கங்கள் இருந்துள்ளன என்ற முடிவிற்கு இதன் வழியாக வரஇயலும். எனவே சங்க இலக்கியத்தின் காலம் என்பது சுமார் கி. மு. ஏழாம் நூற்றாண்டளவில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளலாம். இந்த எல்லை கற்பனை கலந்தது என்று கருதுவாரும் உண்டு. இருப்பினும் இந்நூற்றாண்டளவையே நிலை நிறுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன என்று அறியும்போது இக்கருத்தின் உண்மை வலுப்பெறுகிறது.
தமிழின் தொன்மையை கணக்கிட மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதுவரை இயற்றப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் பட்டியலில் சிலவற்றை கீலே தொகுத்து இருக்கிறேன்இந்த சில நூல்களை படிக்கவே ஒரு பிறவி போதாது!
- தேவாரம்
- திருவாசகம்
- திருமந்திரம்
- திருவருட்பா
- திருப்பாவை
- திருவெம்பாவை
- திருவிசைப்பா
- திருப்பல்லாண்டு
- கந்தர் அனுபூதி
- இந்த புராணம்
- பெரிய புராணம்
- நாச்சியார் திருமொழி
- ஆழ்வார் பாசுரங்கள்
போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- அகநானூறு
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
என்னும் “எட்டுத்தொகை” சங்க நூல்கள்…!
- திருமுருகாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப் பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
என்னும் “பத்துப்பாட்டு” சங்க நூல்கள்….!
- திருக்குறள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னாநாற்பது
- இனியவை நாற்பது
- கார் நாற்பது
- களவழி நாற்பது
- ஐந்திணை ஐம்பது
- திணைமொழி ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமாலை நூற்றைம்பது
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி
- சிறுபஞ்சமூலம்
- முதுமொழிக் காஞ்சி
- ஏலாதி
- இன்னிலை
என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்…!
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
போன்ற ஐம்பெருங் காப்பியங்கள்…!
- அகத்தியம்
- தொல்காப்பியம்
- புறப்பொருள் வெண்பாமாலை
- நன்னூல்
- பன்னிரு பாட்டியல்
போன்ற இலக்கண நூல்கள்
“இறையனார் களவியல் உரை” எனும் உரைநூல்..!
கம்பராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாச நூல்கள் மற்றும் அதன் வழிநூல்கள்.
- முத்தொள்ளாயிரம்
- முக்கூடற்பள்ளு
- நந்திக்கலம்பகம்
- கலிங்கத்துப்பரணி
- மூவருலா
போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்…!
ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பது தான்.
- தொன்மை
- தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
- பொதுமைப் பண்புகள்
- நடுவுநிலைமை
- தாய்மைத் தன்மை
- கலை பண்பாட்டுத் தன்மை
- தனித்து இயங்கும் தன்மை
- இலக்கிய இலக்கண வளம்
- கலை இலக்கியத் தன்மை
- உயர் சிந்தனை
- மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி நம் தாய்மொழி தமிழ்..!
தமிழ் புலவர்கள் மற்றும் அறிஞர்களின் பட்டியலை மற்றொரு இடுகையில் (பாகம் 2ல்) தொகுத்து வழங்குகிறேன்…