குளித்ததும் முதலில் எதை துடைக்க வேண்டும்

kulithadum-mudhalil-yedhai-thudaika-vendum

குளித்ததும் முதலில் முதுகைத்தான் துடைக்க வேண்டும். ஏன்?

நம்பிக்கை

நம் உடலில் எப்போதும் இரண்டு சூழ்நிலைகள் உள்ளன. அவை நன்மையையும் தீமையும் அதாவது நன்மை என்று ஸ்ரீதேவியும் தீமை என்று மூதேவியும் குறிப்பிட படுகிறது. நாம் குளிக்கும் போது இருவரும் நம் உடலை விட்டு வெளியேறுகின்றனர். பின் நம் உடலில் எந்த பகுதி முதலில் துடைத்து சுத்தமாகிறதோ அந்த பாகத்தில் மூதேவி முதலில் முந்திக்கொண்டு நுழைந்து விடுகிறது. அதனால் முதுகை முதலில் துடைத்தால் முதுகில் மூதேவி குடிகொள்வாள் இரண்டாவதாக முகத்தை துடைத்தாள் ஸ்ரீதேவி குடிகொண்டு நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள். மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்த முகத்துடன் நாள்முழுவதும் கழிக்க வேண்டியது தான்.

அறிவியல்

மேலே குறிப்பிட்ட மூட நம்பிக்கைக்குள் ஒரு மகத்தான அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.

குளிக்கும் போது நம் உடலின் எல்லா பாகங்களிலும் குளிர் பரவுகிறது. மிக அதிகமான குளிர் அனுபவப்படுவது முதுகில்தான். முதுகெலும்பில் அதிகநேரம் குளிர் ஏற்க வேண்டியது வந்தால் எளிதில் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. இதனால் உண்டாகும் தீங்கை தவிர்க்கவே குளித்ததும் முதலில் முதுகை துடைக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள். மேலும் நம் முன்னோர்கள் அதிகாலை எழுந்து குளிர் நீரில் குளிப்பதனால் இந்த ஒழுக்கத்தை கடைபிடித்தனர்.

Exit mobile version