எங்களை பற்றி

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு நம் பாரம்பரியம், கலாச்சாரம், இலக்கியம், வைத்தியம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வரலாறு ஆகியவற்றை எளியநடையில் அனைவராலும் புரிந்துகொள்ளும் படி நினைவூட்டவும், மேலும் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பயனுள்ள நிகழ்நிலை வலைப்பதிவு தான் வாசகம்

தமிழ் மொழியின், கலாச்சாரத்தின் தகவல் களஞ்சியம் உருவாக்கவேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடே வாசகம்.காம் ஆகும். இதன் மூலம் தமிழின் சிறப்பை, தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளை தொகுப்பதும், அவற்றை உலகில் உள்ள நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு கொண்டு சேர்ப்பதும், நம் மொழியை, பண்பாட்டை மறவாமல், நம் தமிழ் உறவுகள் ஒருவரோடு ஒருவர் உறவாட பாலம் அமைத்துக்கொடுப்பதும் இந்த வலைப்பதிவின் நோக்கமாகும்.

வாசகம் கீழ்காணும் கொள்கைகளின் அடிப்படைகளை கொண்டு செயல்படுகிறது.

  • நம் தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
  • தமிழ் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் மொழி ஆய்வு, வளர்ச்சி சார்ந்த சிந்தனைகள், காணொளிகள், உரையாடல்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் சாதனையாளர்கள் என அவர்களின் கருத்துக்களை, சிந்தனைகளை பதிவுசெய்தல் மற்றும் பாதுகாத்தல்.
  • தமிழில் உள்ள அரிய மொழி சார்ந்த தகவல்களை சேகரித்து தொகுத்தல்.